பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டணியில் இணைவதை ரத்து அதிகாரத்தால் தடுக்கப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.
4 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், 3 நாடுகளும் ஒன்று மற்றதன் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டன.
அதை அடுத்து, பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விண்ணப்பத்தைத் தொடரலாம்.
அவை நேட்டோவில் இணைவதற்குத் துருக்கியின் ஆதரவை உறுதிப்படுத்தும் இணக்கக் குறிப்பில் 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பின்லாந்து ஜனாதிபதி கூறினார்.
ரஷ்யாவை சூழ உள்ள நாடுகளை நேட்டோவில் இணைத்து வருகிறது அமெரிக்கா. இதனை ரஷ்யா பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இந்த காரணத்தின் அடிப்படையிலேயே உக்ரைக் மீது போர் தொடுத்ததாக கருதப்படுகிறது.
உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விருப்பத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தன.