25.4 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இலங்கை

ரயில் கட்டணங்களில் திருத்தம்!

ரயில் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணங்களையும், 14 ஆண்டுகளாக திருத்தப்படாமல் இருந்த சரக்கு, தபால் மற்றும் இதர கட்டணங்களையும் திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க கொள்கைக்கு அமைவாக இலங்கை புகையிரத திணைக்களம் சலுகைக் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையினால் திணைக்களத்திற்கு ஏற்படுகின்ற நட்டங்களைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முன்வைத்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Pagetamil

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு

Pagetamil

Leave a Comment