கடந்த 25ஆம் திகதி இரவு ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய யுவதி இன்று உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஹோமாகம, மாகம்மன பகுதியைச் சேர்ந்த 19 வயதான கவிந்தி ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்த காவிந்தி ரணசிங்கவின் பெற்றோரும் உயிரிழந்தனர். அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று 28ஆம் திகதி நடைபெற்றது.
காயமடைந்த ஆறு வயது மகள் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1