பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நாளை விசேட கூட்டமொன்றைக் கூட்டியுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம கருத்து தெரிவிக்கையில், பஸ் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கட்டண திருத்தம் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இல்லை என்றால் நாளை முதல் பஸ் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அரசியல்வாதிகள் அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அரசு நிறுவனங்கள் அதிக அளவில் பணியாளர்களைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் நிறுவனங்கள் இழப்பை ஏற்படுத்துவதாக அரசு தொடர்ந்து புகார் அளித்து வருகிறது.
பஸ் உரிமையாளர்கள் ஊடாக இவ்வாறான நஷ்டத்தை மீட்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைக்குள் கட்டணங்கள் திருத்தப்படாவிட்டால், பேருந்து உரிமையாளர்கள் நாளை சேவையில் இருந்து விலகுவார்கள் என்று அவர் கூறினார்.