நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
பல நாட்களின் பின்னர் நேற்று நெல்லியடி நிரப்பு நிலையத்திற்கு பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. பெற்றோல் விநியோகிக்கப்படும் தகவல் பரவியதால் காலை முதலே எரிபொருளுக்கு நீண்ட வரிசை காத்திருந்தது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழவுள்ள 4 வீதிகளிலும் வரிசை காத்திருந்தது.
எனினும், 6,600 லீற்றர் பெற்றோலே விநியோகிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பவுசர் வந்தபோது காத்திருந்தவர்கள் வீதியில் தேங்காய் அடித்து, கரகோசமெழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எரிபொருள் விநியோகம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே வரிசை குலைந்து, மக்கள் கட்டுக்கடங்காமல் முன்னேறி வருகிறார்கள். இதனால் வீதிப் போக்குவரத்து முடங்கியுள்ளது. நிலைமையை பொலிசாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1