திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த டபிள்யு எம்.சுனில் (42) என்பவரே உயிரிழந்தார்.
கந்தளாயில் இருந்து மெதிரிகியவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போதே வீதியை மறித்து காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1