மாத்தறை ரயில் நிலையத்தில் நேற்றிரவு ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை ரயில் நிலையத்தில், பெலியத்த நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் ஏறுவதற்கு முற்பட்ட அந்த நபர், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் வழுக்கி விழுந்து சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தை வெளியில் எடுப்பதற்கு சுமார் ஒரு மணித்தியாலம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் டிக்வெல்ல வெவ்ருகன்னல பகுதியைச் சேர்ந்த ருசர விதானகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1