26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

மோசடி குற்றச்சாட்டில் சிங்கர் முகாமையாளருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள, சிங்கர் நிறுவனத்தில் 44 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில், மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதன் முகாமையாளரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  நேற்று முன்தினம்  (07) உத்தரவிட்டார்.

குறித்த நிறுவனத்தில் கடமையாற்றி வந்த முகாமையாளர், நிறுவனத்தின் 44 இலட்சத்து 67 ஆயிரத்து 353 ரூபாவை மோசடி செய்துள்ளதாக  அந்த உரிமையாளர்  குறித்த நபருக்கு எதிராக, மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, குறித்த நபரை நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவரை எதிர்வரும் 13 ம் திதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment