நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் பிரபலங்கள் சூழ பிரமாண்டமாக நடைபெற்றது. இதையொட்டி நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
‘நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். ஏறக்குறைய 6 வருடங்களாக காதலித்து வந்தவர்கள் இன்று மண வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, திருப்பதியில் நடைபெறவிருந்த அவர்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் சென்னைக்கு மாற்றப்பட்டது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1