நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களில் இருந்து 2.5 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை யக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிரில்லவளையில் உள்ள தனியார் வங்கியொன்றில் போலி அட்டைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக பணம் பெற்று வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் யக்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த தொம்பே கிரிதர பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், தேவையான பணத்தை பெற்றுக் கொடுப்பதற்காக ஏ.டி.எம்.களில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்தளை பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட 14 பிரதேசங்களில் அதிகளவான முறைப்பாடுகள் மோசடியான பணப்பரிமாற்றங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளன.
பணம் எடுக்க வரும் கணக்குதாரர்களுக்கு உதவி செய்வதாக காட்டி, இரகசிய இலக்கங்களை தெரிந்து கொண்டு, தானியங்கி பண இயந்திரங்களை செயலிழக்க வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.