போராட்டங்களால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு பொதுமக்கள் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக எம்.பி.யிடம் வினவியபோது, நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு பொலிசார் பாதுகாப்பு வழங்குவதுடன், அமைதியின்மை ஏற்படுவதைத் தடுப்பதற்கு அவர்களின் பெரும்பாலான நேரங்கள் செலவிடப்படுவதாகக் கூறினார்.
நாட்டில் கப்பம் கோருபவர்கள் மற்றும் பாதாள உலக குழுவினர் தலைதூக்குவதை அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் சில நாசவேலை இயக்கங்களால் பொலிசார் பலவீனமடைந்துள்ளதால், காவல்துறையை தான் குற்றம் சொல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், போராட்டக்காரர்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தினமும் வீதிகள் மூடப்படும் சம்பவங்களை காவல்துறை கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.