சட்டவிரோதமாக ஒன்றுகூடல் மற்றும் பொலிஸ் முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக மாத்தறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு மூன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
30 வயதுடைய நபருக்கு, ஏப்ரல் மாதம் மாத்தறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் முச்சக்கர வண்டியை சேதப்படுத்தியதற்காக ரூ.6000 அபராதமும், ரூ.50,000 நட்டஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு – மாத்தறை வீதியை மறித்து எரிபொருள் கோரி ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1