பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதி ஆட்டத்திற்கு நோர்வேயின் காஸ்பர் ரூட், குரோஷியா குரேஷிய வீரர் மரின் சிலிச் தகுதி பெற்றனர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7ஆம் நிலை வீரரான நோர்வேவின் காஸ்பர் ரூட், டென்மாா்க் வீரர் ஹோல்கர் ரூன்னும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஸ்பர் ரூட் 6-1 4-6 7-6(7-2) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவா் அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்றார்
மற்றொரு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவும் ,குரேஷிய வீரர் மரின் சிலிச்சும் மோதினா். இந்த ஆட்டத்தில் முதல் 4 செட்களில் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினா்.
வெற்றியை தீா்மானிக்கும் கடைசி செட்டும் டை பிரேக்கா் வரை நீடித்தது. குரேஷிய வீரரான சிலிக் 5-7 6-3 6-4 3-6 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.