நேற்று ( 31) முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுபானங்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 750 மி.லீ மதுபான போத்தல் ஒன்றின் விலையை 520 ரூபாவாலும், பியர் டின் ஒன்றின் விலையை 30 ரூபாவாலும் உயர்ந்துள்ளது.
வற் வரி அதிகரிப்பினால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் எனவும், உற்பத்திச் செலவை உற்பத்தியாளர் நுகர்வோரிடமிருந்து ஈட்ட முடியும் எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது அத்தியாவசியமற்ற தயாரிப்பு என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விற்பனை விலையை நிர்ணயம் செய்ய முடியும் என்றும், இதற்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1