நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 4ஆம் திகதி திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை இறுதியாண்டு இறுதிப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் ஊடகங்கள்) சந்தன ஏகநாயக்க இதனை தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர், திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.