24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
கிழக்கு

பக்கத்து வீட்டில் குடிவந்த முன்னாள் காதலியை பார்த்து அடிக்கடி சிரித்த கணவன்: மனைவி விவாகரத்து வழக்கு!

அயல்வீட்டு மாடித்தளத்தில் வாடகைக்கு குடிவந்த குடும்பப் பெண்ணை பார்த்து சிரித்தவரின் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பகுதியொன்றில் நடந்து வரும் இந்த விவகாரத்து வழக்கு பற்றிய விபரம் வருமாறு-

கடந்த ஒரு வருடத்தின் முன்னர் திருமணமான ஜோடியொன்றே கடந்த 3 மாதங்களின் முன்னர் விவாகரத்து வழக்கை சந்தித்துள்ளனர்.

திருமணமாகிய ஆரம்பத்தில் ஒரு சில மாதங்கள் தமது உறவு சுமுகமாக காணப்பட்டதாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ள 23 வயதான பெண் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தின் பின்னர் வெளிநாட்டிலுள்ள பெண்ணின் மாமனாரின் வீட்டில் அவர்கள் குடியிருந்தனர். விற்பனை முகவராக செயற்படும் 27 வயதான கணவரில் ஏற்பட்ட சந்தேகமே விவாகரத்து வழக்கிற்கு காரணமாகியுள்ளது.

தாம் குடியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள மாடி வீட்டின் மேல் தளத்திற்கு புதிதாக ஒரு தம்பதி வாடகைக்கு குடிவந்ததாகவும், அந்த வீட்டு பெண்ணும், தனது கணவரும் அடிக்கடி பார்த்து சிரித்து கொள்வதுடன், பல சந்தர்ப்பங்களில் சைகை மொழியில் தகவல் பரிமாறியதை கண்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த பெண் அடிக்கடி- ஏதாவது சாக்கில்- மாடியிலிருந்து தமது வீட்டு பக்கமாக வந்து நிற்பதாகவும், அப்போது தனது கணவரும் வெளியில் செல்வதாகவும், இருவரும் இப்படி சைகை மொழி பேசுவதை சில நாட்களின் பின்னரே கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கணவர் வேலைக்கு சென்ற பின்னர், மாடி வீட்டு பெண்ணுடன் சென்று தான் பேசியதில், தனது கணவரும், அந்த பெண்ணும் முன்னாள் காதலர்கள் என்பது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு காதல் விவகாரம் இருந்ததை கணவர் திருமணத்தின் முன்னரும் தெரிவிக்கவில்லை, இந்த விவகாரத்தின் பின்னர் தான் சண்டையிட்ட போதும் அதை அதை ஏற்கவில்லையென அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்த பெண் தனது முன்னாள் காதலியல்ல, நெருங்கிய நண்பியாக மட்டுமே இருந்தார், தமக்குள் வேறெந்த உறவும் இருக்கவில்லை என கணவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவி சந்தேகப்படும் இயல்புள்ளவர் என்றும்,  அவர் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணவர் தரப்பில் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தம்பதியினரை உளவியல் ஆலோசகரிடம் நீதிபதி பரிந்துரைத்திருந்தார்.

உளவியல் ஆலோசகரின் ஆற்றுப்படுத்தல்களிலும் அந்த தம்பதியினரின் பிரிவை சரி செய்ய முடியவில்லை. அத்துடன், விவாகரத்து கோரிய பெண்ணிற்கு உளச்சிக்கல்களும் இல்லையென்றும் உளவியல் ஆலோசகர் பரிந்துரைத்துள்ளார்.

இதையடுத்து, மீண்டும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காயங்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

east tamil

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு

east tamil

மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்

east tamil

திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்

east tamil

Leave a Comment