3,500 மெட்ரிக் தொன் திரவ பெட்ரோலிய வாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான வானிலை நிலவும் பட்சத்தில், இன்றே கப்பலில் உள்ள எரிவாயுவை இறக்கிவிடலாம் என நம்புவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு, சுமார் 10 மணிநேரம் எடுக்கும் தரச் சோதனை நடத்தப்படும்.
இதன்படி, புதன்கிழமை முதல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் கருதுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1