இத்தாலியில் 18 வயது இளைஞர் ஒருவர், 76வயதான பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலியை சேர்ந்தவர் 19 வயதான கியூசெப் டி’அன்னா. இவரை ரிக்ரொக்கில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் கடந்த மே 24 ஆம் திகதி தனது ரிக்ரொக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அன்னா தனது 76 வயதான காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார். மேலும், தாங்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பலரும் அவர்களது காதல் குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.
”நீங்கள் பணத்திற்காகத்தானே அந்தப் பெண்னை காதலிக்கிறீர்கள்?”, “அவர் உங்களுக்கு பாட்டியை போல் உள்ளார்” என்று நெட்டிசன்கள் பலரும் அன்னாவின் பதிவின் கீழே பதிவிட்டனர்.
அதற்கு அன்னா ”இல்லை… நான் அவரை காதலிக்கிறேன். எங்கள் காதல் அழகானது” என்று பதிலளித்திருந்தார்.
சிலர் இவர்களது காதலுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
காதலுக்கு வயதில்லை என்பதையும் மெய்ப்பித்துள்ள இந்த காதல் இணையர் இப்போது இத்தாலியில் பிரபலமாகி வருகின்றனர்.