வீடு உடைத்து தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், யுவதியொருவரும் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியில் இரண்டு மாதங்களின் முன்னர் வீடு உடைத்து திருடப்பட்டிருந்தது.
தங்கச்சங்கிலி, கைத்தொலைபேசி, ரப் என்பன திருடப்பட்டிருந்தன.
வீட்டு உரிமையாளர்கள் இது தொடர்பில் நெல்லியடி பொலிசாரிடம் முறையிட்டிருந்தனர். கைத்தொலைபேசி குறியீட்டு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிசார், அந்த தொலைபேசியை பாவித்து வந்தவரை அடையாளம் கண்டனர்.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான யுவதியொருவரே அதனை பயன்படுத்தினார்.
அவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட பொருட்களை விலை கொடுத்து வாங்கியதை அறிந்தனர்.
அந்த பொருட்களை விற்பனை செய்த இளைஞன் வல்வெட்டித்துறையில் கைதானர். அவரே வீடு உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவை திருடப்பட்ட பொருட்கள் என தெரிந்தே யுவதி பொருட்களை வாங்கியதாகவும், ஏற்கனவே இளைஞனிடமிருந்து திருட்டு பொருட்களை அவர் வாங்கியதாகவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.