யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணிளவில் இந்த சம்பவம் நடந்தது.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரட்ணம் திருக்குமார் (32) என்ற இளைஞனே உயிரிழந்தார். 24 வயதான மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1