இலங்கையில் தொடர்ந்து 6வது நாளாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எரிவாயுவை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்க வேண்டாம் என நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு இன்று அமுலுக்கு வராது எனவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
திங்கட்கிழமை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1