அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த 37 பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 814 லிட்டர் பெட்ரோல் மற்றும் 4328 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேவேளை, பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் நிரப்ப வரும் வாகனங்களை அடையாளம் காணும் வகையில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி செயலி தற்போது 1400 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு முறை எரிபொருள் நிரப்பப்பட்ட சுமார் 2800 வாகனங்களை செயலி அடையாளம் கண்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் 450 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1