திருகோணமலை ராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நிகழ்வு ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.
திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கேட்போர் கூடத்தில் கல்லூரின் அதிபர் எஸ்.பத்மசீலன் தலைமையில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1897ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி திருகோணமலை மாவட்ட சைவப் பெரியார்களின் ஆரம்பிக்கப்பட்டு 28 வருடங்களின் பின்னர் சுவாமி விபுலானந்தர் அவர்களினால் ராமகிருஷ்ண மிஷனுக்கு கைஏற்கப்பட்டு 1925ஆம் ஆண்டில் இருந்து 1962ஆம் ஆண்டு வரை ராமகிருஷ்ணன் மிஷன் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வந்தது அதே ஆண்டு பாடசாலைகள் சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் குறித்த பாடசாலையும் அரசினால் சுவீகரிக்க பட்டது.
1997ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது தேசிய பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது தேசிய பாடசாலை யாகவும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
அங்கீகரிக்கப்பட்டது என திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சருமான சிங்காரவேலு தண்டாயுதபாணி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் கல்லூரியின் 125 ஆவது நிறைவையொட்டி பாடசாலை மட்டத்தில் மட்டுமல்லாது மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளில் கல்வி மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 125 ஆவது வருட நிறைவையொட்டி எதிர்வரும் முதலாம் திகதி தபால் தலை வெளியீடும் கல்லூரியின் வரலாறு தொடர்பில் நூல் வெளியீடும் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்த கல்லூரியின் அதிபர்.
குறித்த பாடசாலையின் 125 ஆவது வருட நிறைவை கொண்டாடும் முகமாக கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கக் குழு,நாட்டில் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள பழைய மாணவர் சங்கத்தின் கிளை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரியின் பழைய மாணவர்களினால் நிதி ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியினை சரியான முறையில் கண்காணித்து கல்லூரியின் 125 ஆவது வருட நிறைவை விழாவாக கொண்டாடுவதற்கு ஏற்பாட்டு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கே.ரதன் கல்லூரியின் அபிவிருத்திச்சங்க குழுவின் செயலாளர் அருள் வரதராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன்
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 2017 மாணவர்கள் கல்வி கற்பதுடன்,97 ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களாக 14 பேரும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ் –