26.2 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் தலைசிதறிய நிலையில் இந்தியரின் சடலம் மீட்பு!

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு (27) 11.30மணியளவில் தலை சிதறிய நிலையில் இந்தியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் இரத்தம் ஓடிய படி ஒருவர் காணப்பட்ட நிலையில், அதனை அவநானித்த சிலர் அவரை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையம் ஒன்றின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளார் என விசாரணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபரின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இந்தியாவை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை-இந்திய மீனவர் விவகாரம்: மீனவர்களை ஏமாற்ற சிலர் முயற்சி – டக்ளஸ் தேவானந்தா

east tamil

சிஐடிக்கு அழைக்கப்பட்ட கோட்டா, மனுஷ

Pagetamil

முன்னாள் தூதுவர் உதயங்க பிணையில் விடுவிப்பு

east tamil

நானாட்டான் பிரதேச சபைச் செயலாளரின் முறைகேடு

east tamil

முள்ளியவளைப் படுகொலை: 1985ல் மனித நேயம் கண்ணீரை சிந்திய நாள்

east tamil

Leave a Comment