அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஆரம்பப் பாடசாலைக்குள் துப்பாக்கிதாரி நிகழ்த்திய கொலைவெறியாட்டத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைடுக்க தவறி விட்டோம் என்பதை அமெரிக்க பாதுகாப்பு தரப்புக்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
உவால்டே, ராப் ஆரம்பப் பாடசாலைக்குள் நுழைந்த 18 வயதான சால்வடோர் ராமோஸ் என்ற இளைஞன், தனது AR-15 ரகத் துப்பாக்கியினால் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 19 மாணவர்களும், 2 ஆசிரியைகளும் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, அங்கிருந்த மாணவர்கள் குறைந்தது 6 முறை 911 என்ற காவல்துறையின் அவசர எண்ணுக்கு அழைத்திருக்கின்றனர். தம்மை காப்பாற்றும்படி அவர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பாடசாலையின் நடைபாதையில் சுமார் 20 உள்ளூர் பொலிசார், ஒரு மணிநேரம் காத்திருந்தனர். எனினும், துப்பாக்கிதாரி தங்கியிருந்த அறைக்குள் அவர்கள் நுழையவில்லை.
பாடசாலைக்குள் நடக்கும் தாக்குதல் சம்பவம் பற்றி, 911 என்ற அவசர இலக்கத்திற்கு முதலாவது அழைப்பு காலை 11:28 மணிக்குப் பெறப்பட்டது. பாடசாலை தீவிரமான தாக்குதலுக்கு உள்ளானது என்பது உடனடியாகத் தெளிவாகியது: பிராந்தியம் முழுவதிலுமிருந்தும் பாதுகாப்பு பிரிவுகள் சம்பவ இடத்திற்கு சென்றன. அமெரிக்காவின் உயரடுக்கு எல்லை ரோந்து தந்திரோபாய பிரிவு BORTAC, மற்றும் ICE இன் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைகள் (HSI) ஆகியவை அடங்கும்.
உயரடுக்கு எல்லை ரோந்து தந்திரோபாய பிரிவினர் சம்பவ இடத்திற்கு 12.15 மணியளவில் சென்றனர். பின்னர், அவர்கள் உள்ளே நுழைந்து 12:50 மணியளவில் ஆயுததாரியை சுட்டுக் கொன்றனர்.
எனினும், BORTAC, பிரிவினர் அங்கு சென்ற போது, சுமார் 20 உள்ளூர் பொலிசார், ஆயுததாரி தங்கியிருந்த அறைக்கு வெளியில் காத்திருந்துள்ளனர். BORTAC பிரிவினரையும் உள்ளே செல்ல வேண்டாமென உள்ளூர் பொலிசார் அறிவுறுத்தினர்.
நண்பகல் 12 மணியளவில் ஒரு சிறுமி அழைத்துத் ஆயுததாரி இருக்கும் அறையைக் குறிப்பிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு 45 நிமிடத்துக்குப் பிறகே, பாதுகாப்பு தரப்பினர் உள்ளே நுழைந்திருக்கின்றனர்.
உவால்டே மாவட்ட காவல்துறைத் தலைவரான பீட் அரெடோண்டோ, இந்த சுற்றிவளைத்திருக்கும் உத்தரவை பிறப்பித்திருந்ததாக தெரிய வந்துள்ளது.
12.15 மணியளவில் அங்கு வந்த BORTAC பிரிவினரை உள்ளே நுழைய வேண்டாமென பீட் அரெடோண்டோவே உத்தரவிட்டதாக தெரிய வருகிறது. தமது சுற்றிவளைப்பில் ஆயுததாரி அகப்பட்டுள்ளதாக அவர் தவறாக நம்பியுள்ளார்.
ஆனால் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அவரது கட்டளையை மீறி BORTAC பிரிவினர் உள்ளே நுழைந்தனர்.
ஏனெனில், வகுப்பறைக்குள் உள்ள குழந்தைகள் 911 எண்ணை திரும்பத் திரும்ப அழைத்து, உதவிக்காக கெஞ்சிக் கொண்டிருந்ததால், கட்டளையை மீறி BORTAC பிரிவினர் உள்ளே நுழைந்தனர்.
துப்பாக்கி ஏந்திய நபர் மதியம் 12:50 மணியளவில் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆரம்பத்தில் பொலிசார் தவறான தகவல்களை வெளியிட்டதும் தெரிய வந்தது.
ராமோஸ் உடல் கவசம் அணிந்திருந்ததாகவும், ஆயுதம் ஏந்திய பொலிசாரால் தடுக்கப்பட்டதாகவும் கூறினர். எனினும், அது உண்மை இல்லை என்பது தெரிய வந்தது.
வகுப்பறையில் ராமோஸ் தடுக்கப்பட்டதாக முன்னதாக பொலிசார் குறிப்பிட்டாலும், அவர் தங்கியிருந்த அறைக் கதவைத் திறக்க ஒரு திறப்பு தேவையென குறிப்பிட்ட பொலிசார், அதற்காக நீண்ட நேரம் காத்திருந்ததும் தெரிய வந்தது.
பொலிசார் ஏன் கதவை உடைக்கவில்லை என்ற கேள்விகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 20 உள்ளூர் பொலிசார் அறைக்கு வெளியே 1 மணித்தியாலம் காத்திருந்தனர்.
துப்பாக்கிதாரியுடன் பேச்சு நடத்த காத்திருந்ததாகவும், ஆயுததாரி இருந்த அறைக்குள்ளிருந்த அனைவரும் இறந்து விட்டதாக நம்பியதாகவும் உள்ளூர் பொலிசார் தெரிவித்த காரணங்கள் பரவலான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘நிச்சயமாக அது சரியான முடிவு அல்ல. இது தவறான முடிவு’ என்று டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறை இயக்குநர் ஸ்டீவன் மெக்ரா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ராமோஸ் வகுப்பறைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே சரமாரியான துப்பாக்கிச் சூடு நடந்ததாக மெக்ரா கூறினார்,
பாதுகாப்பு தரப்பினர் அவரை கொல்ல 48 நிமிடங்களை எடுத்ததாக குறிப்பிட்டார்.
அந்த 48 நிமிடங்களில் எத்தனை குழந்தைகள் இறந்தார்கள் என்பது புலனாய்வாளர்களுக்குத் தெரியாது என்றார்.
ராமோஸ் வகுப்பறைக்குள் நுழைந்து 11.34 மணியளவில் கதவைப் பூட்டினார்.
முதல் சில நிமிடங்களில், அவர் 111 மற்றும் 112 இலக்க வகுப்பறைகளுக்குள் 100க்கும் மேற்பட்ட தோட்டாக்களை சுட்டார்.
அவர் மதியம் 12.21 மணி வரை ‘எப்போதாவது’ துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
மதியம் 12.50 மணியளவில் காவலாளியிடமிருந்து சாவியைப் பெற்று வகுப்பறைகளுக்குள் பாதுகாப்பு தரப்பினர் நுழைந்தனர்.
பாதுகாப்பு தரப்பினரின் அசமந்தமான இந்த நேர இடைவெளியில் ஆசிரியர்களும் குழந்தைகளும் மீண்டும் மீண்டும் 911 என்ற எண்ணுக்கு உதவி கேட்டு, ‘தயவுசெய்து இப்போதே போலீஸை அனுப்புங்கள்’ என்று கெஞ்சினர்.
‘இப்போது நான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து – நிச்சயமாக அது சரியான முடிவு அல்ல. அது தவறான முடிவு. மன்னிக்கவும் இல்லை,’ என்று மெக்ரா கூறினார்.
டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட், சட்ட அமலாக்கத்தால் வழங்கப்பட்ட நிகழ்வுகளின் முரண்பாடான மற்றும் சீரற்ற பதிப்பில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
நடந்த சம்பவம் பற்றிய பொய்யான தகவல்கள் தனக்கும், சமூகத்திற்கும் வழங்கப்பட்டதாக கோபத்தை வெளிப்படுத்தினார்.
யையும், முழுமையான உறுதியுடன் பெற வேண்டும்’ என்று அபோட் கூறினார்.
தவறான தகவல்களால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது ‘மன்னிக்க முடியாதது’ என்று அவர் கூறினார், மேலும் ‘ஒவ்வொரு நொடியும் என்ன நடந்தது என்று இறங்கி, பொதுமக்களுக்கு – ஆனால் மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு விளக்க வேண்டும்’ என்று சட்ட அமலாக்கத்திற்கு உத்தரவிட்டார்.