சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆறு பேருக்கு உடல் நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் தொடர்ந்து 8 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றது உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக, 84 இலங்கை தமிழர்கள் உட்பட இலங்கை, பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 110 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 9 பேர் தங்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்று வருகிறது. போராட்டத்தின் ஏழாம் நாளான நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இல் 6 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது அதனையடுத்து அவர்கள் காவல்துறை வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் மீதமுள்ள நான்கு பேருடன் இணைந்து மேலும் 6 பேர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை எட்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றனர்.