29.6 C
Jaffna
April 19, 2024
இலங்கை

21A இல் உள்ளடக்கப்பட வேண்டிய மேலும் சில திருத்தங்களை முன்மொழிகிறது ஜேவிபி!

அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தில் உள்ளடக்கப்படுவதற்கு பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

திருத்தங்களுக்குப் பதிலாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைக்கலாமென்றும், எனினும் இந்த ஆட்சியாளர்கள் ஒருபோதும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரமாட்டார்கள் என்பதால் ஜனநாயக விழுமியங்களைப் பலப்படுத்தும் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

தமது சட்டத்தரணிகள் 21A இல் உள்ளடக்கப்பட வேண்டிய சில விதிகளை உருவாக்கி வருவதாகத் தெரிவித்த அவர், அந்தத் திருத்தங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டு குழுநிலை விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சுப் பதவிகளை வைத்திருப்பதற்கும் பொறுப்பேற்றுக் கொள்வதற்குமான ஜனாதிபதியின் அதிகாரங்களையும் ஜனாதிபதியின் மன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரங்களையும் நீக்குவதற்கான ஏற்பாடுகளை 21A யில் உள்ளடக்க வேண்டுமென தெரிவித்தார்.

“இரட்டைக் குடியுரிமை தொடர்பான ஷரத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிப்பதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும். எம்.பி.க்கள் கட்சி மாறுவதை தடை விதிக்கும் விதிகளும் அதில் சேர்க்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை தணிக்கை செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

தற்போதைய பிரதமருக்கு அல்லது பாராளுமன்றத்திற்கு புதிய திருத்தத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான ஆணை அல்லது தார்மீக உரிமை இல்லை என்ற வகையில் தற்போதைய பாராளுமன்றத்தின் காலத்தை கட்டுப்படுத்த புதிய திருத்தத்தில் இடைக்கால ஷரத்து ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்றும்  கூறினார்.

“பிரதமராகச் செயல்பட எந்த ஆணையும் இல்லாத தற்போதைய பிரதமருக்கு 21A மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை. எனவே, புதிய திருத்தத்தில் குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் வரை இடைக்கால ஷரத்து சேர்க்கப்பட வேண்டும். அதன்பின், புதிய அரசு தேர்வு செய்யப்பட வேண்டும்,” என்றார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment