கடந்த மூன்று நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள 1,044 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றைப் பெற்றுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
40 நிலையங்கள் இரண்டு எரிபொருள்களையும் பெறவில்லை என்று அமைச்சர் கூறினார்.
பெரும்பாலான நிலையங்கள் எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை. செயல்படாமல் உள்ளன அல்லது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளனர் என்றார்.
நகர்ப்புற எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தினமும் இருமுறை கையிருப்பு வழங்கப்படுவதாகவும், சிலவற்றிற்கு தினம் ஒரு முறையும், மற்ற அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் ஒவ்வொரு நாளும் கையிருப்பு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று மாத்தறையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெற்றோலியப் பொருட்கள் மீள் விற்பனைக்கு தயாராகும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மீள்விற்பனைக்கான எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிவதாக அவர் கூறினார்.