குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலகரத்ன விசேட பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் திலகரத்னவின் கோரிக்கைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நுவரெலியா பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பிரசாத் ரணசிங்க முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1