கனடாவின், பிராந்தியத்தில் 20 வயதான தமிழ் இளைஞன் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகன விபத்து என பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றனர். வாகனத்தில் இளைஞனின் சடலம் காணப்பட்டது.
பிரேத பரிசோதனையில் துப்பாக்கிச்சூட்டால் நிகழ்ந்த மரணம் என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த வியாழன் (19) மதியம், பிக்கரிங்கில் உள்ள Taunton Road மற்றும் Concession Road 4க்கு அருகில் மோட்டார் வாகனம் மோதியதாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. பொலிசார் அங்கு சென்ற போது, வாகனத்திற்குள் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூட்டுக் காயம் எனத் தெரியவந்துள்ளது.
பலியானவர் பிக்கரிங் பகுதியைச் சேர்ந்த அரவின் சபேசன் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புலனாய்வாளர்கள் இந்த விஷயத்தில் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பிக்கரிங்கில் உள்ள டவுன்டன் ரோடு மற்றும் ப்ரோக் ரோடு பகுதியில் டாஷ் கேம் வீடியோவை வைத்திருப்பவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முறையான தகவல் வழங்குபவர்களுக்கு 2,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.