அரச சேவையின் அத்தியாவசிய கடமைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை, பொது நிருவாக அமைச்சின் செயலாளர் நாளை (24) வெளியிட உள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட உள்ளார்.
சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரத்தை நிறுவன தலைவருக்கு வழங்குவது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1