வாள்வெட்டில் ஈடுபட்ட 5 ரௌடிகளை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆவா வாள்வெட்டு ரௌடிக்குழுவை சேர்ந்த ‘கனி’ என அழைக்கப்படும் ரௌடி மீது சில நாட்களின் முன்னர் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 5 ரௌடிகள் நேற்று மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம், கிளிநொச்சி, உடுவில் பகுதிகளை சேர்ந்த ரௌடிகளே கைது செய்யப்பட்டனர்.
21, 28, 36, 40 வயதான ரௌடிகளே கைதாகினர்.
யாழ்ப்பாணத்தில் ஆவா, தனுரொக் உள்ளிட்ட சில ரௌடிக்குழுக்கள் இயங்கி வரும் நிலையில், தற்போது கைதான ரௌடிகள் சுன்னாகபம் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் புதிய ரௌடிக்குழு என தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1