இஸ்ரேலில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
30 வயதுகளையுடைய ஆணொருவரே பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் மிதமாகவே பாதிக்கப்பட்டுள்ளார்.
குரங்கம்மை மேலும் பரவாமல் இருக்க சில நூறு தடுப்பூசிகள் வாங்கப்படலாம் என இஸ்ரேலிய சுகாதார அமைச்சர் கூறினார்.
அந்தத் தடுப்பூசிகள் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்குப் போடப்படும்.
ஆனால் இது COVID-19 தொற்று போன்றது இல்லை என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
குரங்கம்மை வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் குறைவு.
அது நெருங்கிய தொடர்பு மூலம் பரவக்கூடியது.
தனிமைப்படுத்துதல், சுகாதார நடைமுறை ஆகியவை மூலம் அதன் பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம் எனக் கூறப்படுகிறது.