இசையமைப்பாளர் டி.இமானின் இரண்டாவது திருமணத்திற்கு, முதல் மனைவி காட்டமான வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இமான் – மோனிகா ரிச்சர்ட் தம்பதிக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள்.
இவர்களிற்கும் முரண்பாடு ஏற்பட்டு கடந்த வருடம் இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதைத்தொடர்ந்து தனது மறுமணம் குறித்து முகநூலில் பதிவிட்ட டி.இமான், தனது இரண்டு மகள்களுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் மனைவி மோனிகா, இமானின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Dear @immancomposer, happy married life. #SingleMomstrong #TamilCinema #Indiaglitz #DImman #vikatan #tamilmovies #tamilnews pic.twitter.com/xATB1eJH8n
— Monicka Richard (@MonickaRichard) May 15, 2022
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “டியர் டி.இமான், உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும், கவனிக்கவும் இல்லை. தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுபிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புது குழந்தையையும் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துகள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.