இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது ‘வீடுகளை இழந்த’ ஆளும் கட்சி எம்.பி.க்களிற்கு வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (18) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், தற்காலிக நடவடிக்கையாகவே இந்த வீடுகள் வழங்கப்படுவதாகவும், அதேவேளை வீட்டின் உரிமை எம்.பி.க்களுக்கு மாற்றப்படாது என்றும் அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவாகிய அமைதியின்மைகளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இதே முறையில் வீடுகள் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1