வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ பொலிசாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் வவுனியாவில் இருந்து பேரூந்து மூலம் புத்தளம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம், புத்தளம், கருவெலச்செவ பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரார்கள் மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே புத்தளம் வருகை தந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரரைணகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.