27.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

விசா வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டதா?: இந்திய தூதரகம் விளக்கம்!

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லது இந்திய துணைத் தூதரகங்கள் அல்லது இலங்கையிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியான தகவல்களை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், விசா பிரிவு ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியாததால், பெரும்பாலான இலங்கை பிரஜைகள் விசாவிற்கு சமூகமளிக்காததால்  செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டன.

செயல்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையர்களின் பயணத்தை இலகுபடுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப் போன்று இலங்கையர்களும் இந்தியாவிலும் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கியதில் நுரைச்சோலை அருகே மூவர் உயிரிழப்பு

east tamil

‘தூய்மையான இலங்கை’ – ஜனவரி 1 முதல் இலங்கையின் மாற்றத்திற்கான முதல் அடி

east tamil

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி

Pagetamil

தமிழ்ச்செல்வன் கடத்தல் வழக்கில் வடமராட்சி ஊடக இல்லத்தின் கண்டனம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment