கொழும்பில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது தப்பிச் சென்ற 58 கைதிகளில் 32 கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க இன்று (13) தெரிவித்தார்.
தப்பியோடிய மேலும் 26 கைதிகளை தேடிவருவதாக குறிப்பிட்டார்.
கொழும்பில் வேலை முடிந்து திரும்பிய 181 கைதிகளை ஏற்றிய வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், இதன்போது 58 கைதிகள் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
காவலில் இருந்து தப்பியோடி இதுவரை ஒப்படைக்கப்படாத கைதிகளை விரைவில் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்து வரலாம் அல்லது 0114677177 அல்லது 0114677517 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்கலாம். அருகில் உள்ள சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ ஒப்படைக்க முடியும் என ஏகநாயக்க தெரிவித்தார்.