Pagetamil
இலங்கை

6 மாதங்களிற்கு இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார்: அநுரகுமார திஸநாயக்க!

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அராஜகத்தை தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அதனை தீர்க்கும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும், தற்போது பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்பதே தமது முதன்மையான நிபந்தனை என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகள் தயாராக இல்லை என்றால், இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்றார்.

“நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எவ்வாறாயினும், இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையை சமாளித்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் வரையில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறினார்.

மக்களின் விருப்பத்துடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திஸநாயக்க கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்: விசாரணைகள் தீவிரம்

east tamil

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

Leave a Comment