25.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இந்தியா

பிரபாகரன் ஆன்மா சாந்தியடையும்; ராஜபக்‌ஷக்களின் நிலைமை அனைவருக்கும் மகிழ்ச்சி: பிரேமலதா விஜயகாந்த்!

அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு அனைவராலும் வரவேற்கக் கூடியது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வன்முறை குண்டர்களை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க முயன்ற மஹிந்த ராஜபக்ச, அது முடியாத நிலையில், பதிவியிலிருந்து விலகியுள்ளார். அலரி மாளிகையிலிருந்து தப்பியோடிய அவர் தற்போது திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருக்கிறார்.

அவரும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில்,

உலகம் முழுவதும் வாழும் அன்பு தமிழ் சொந்தங்களுக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் பணிவான வணக்கங்கள் தெரிவித்து கொள்கிறேன். தமிழினத்தை படுகொலை செய்த இரக்கமற்ற ராஜபக்சவிற்கு இறைவன் கொடுத்த தீர்ப்பாக்கவே இந்த நாளை நான் பார்க்கிறேன். ஒரு இனத்திற்காக போராடிய நமது அன்பு சகோதரர் போராளி பிரபாகரன் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் அப்பாவி தமிழீழ மக்களையும் படுகொலை செய்த தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்ச இன்று அந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்படும் காட்சிகளை நாம் பார்க்கிறோம்.

இன்றைக்கு தான் உண்மையிலேயே தமிழ் மக்கள் வெற்றி பெற்றதாக நான் கருதுகிறேன். விடுதலைப் புலிகள் பிரபாகரன் அவர்களுடைய படுகொலையையும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து பல வழிகளில் கொடுமைப்படுத்தி கொலை செய்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்களே கொடுத்த தீர்ப்பு அனைவரும் வரவேற்கக் கூடிய ஒரு விஷயம்.

பொருளாதார நலிவு மற்றும் பல கலவரங்கள் இலங்கையில் ஏற்பட்டு இலங்கையே தீக்கு இரையாகி கொண்டு இருக்கிறது. அன்று ஈழ மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி வயிறு எரிந்து சாபம் விட்டார்களோ அதன் விளைவாகதான் இன்று ராஜபக்சவின் கொடுமையான ஆட்சியும் இலங்கையும் தீப்பற்றி எரிகிறது.

இன்றைக்கு தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மற்றும் தமிழ் ஈழமக்களின் ஆத்மாவும் சாந்தி அடைந்திருக்கும்.

இந்த வெற்றியை உலக நாடுகளில் இருக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment