பொதுமக்களால் தனது வீடு தீ வைத்ததை பார்த்து பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கதறி அழுதுள்ளார்.
பொதுஜன பெரமுனவினரால் நேற்று வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுஜன பெரமுன பிரமுகர்களிற்க பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வருகிறார்கள்.
பெரமுன முக்கியஸ்தர்களின் வீடுகளும் தீ வைக்கப்பட்டுள்ளன.
பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகரவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தனது வீடு தீக்கிரையானதால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பின்னர் அது குறித்து பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
”நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. இரவும் பகலும் உறங்காமல் கற்பித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு இப்போது தீயாக எரிகிறது.
வாழ்நாள் முழுவதும் அரசியலுக்கு வரமாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
இவர் ஆசிரியராக இருந்து பொதுஜன பெரமுனவின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.