இனங்களையும் மதங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் அரசியல் போராட்டமே நாட்டில் தற்போது நிலவும் குழப்பங்களுக்கு முக்கிய காரணம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய கர்தினால், காலி முகத்திடலில் இருந்து எதிரொலிக்கும் ஒலிகள் புதிய சுதந்திரப் போராட்டத்தின் குரல் என தெரிவித்தார்.
மகத்தான அதிகாரத்துடன் ஆளுகை செய்ய முடியாத ஒரு நபர் நிலவும் நெருக்கடியை உச்சக்கட்டத்தை நோக்கி கொண்டு சென்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது என கர்தினால் மால்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் அரசியல் நிகழ்ச்சி நிரல் அரசியல் படுகொலைகள், பலவந்தமாக காணாமல் போதல்கள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் ஆகியவற்றுடன் சட்டவிரோதமான ஒழுக்கமற்ற அரசை உருவாக்கியுள்ளது என்றார்.
முன்னெப்போதையும் விட தற்போது அமைப்பு மாற்றமும் புதிய தொடக்கமும் தேவை என்று கர்தினால் கூறினார்.