இந்த மாத இறுதியில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, ஒப்பீட்டளவில் அனுபவம் இல்லாத இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன மீண்டும் தலைமை தாங்குவார்.
இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை தேர்வுக்குழுவினர் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். இந்த அணியில் பல முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை.
ரோஷன் சில்வா பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார்.
குறிப்பாக வேகப்பந்து வீச்சில் விஷ்வா பெர்னாண்டோவே ஓரளவு அனுபவம் வாய்ந்தவர்.
கசுன் ராஜித, அசித்த பெர்னாண்டோ, சமிக கருணாரத்ன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர்கள் லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மே 15 அன்று சிட்டகொங்கில் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மே 23 அன்று டாக்காவில் ஆரம்பிக்கும்.
2021-23 காலப்பகுதியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, இரண்டு போட்டிகளில் சமநிலையுடன் இலங்கை தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அஇதேகாலப்பகுதியில் பங்களாதேஷ் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.