நெருக்கமானவர்களின் இறப்பை காரணம் காட்டி அவசர விடுமுறை பெறுபவர்கள், இறந்தவரின் உடலுடன் செல்பி படம் எடுத்து ஆதாரமாக அனுப்பி வைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சாலை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், சில டிப்போக்களில் அவசர விடுமுறை எடுத்தால், அதற்கான ஆதாரத்தை கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இதுபோன்ற விசித்திர சம்பவத்தில், ஓட்டுனர் ஒருவர் தனக்கு நெருக்கமானவரின் இறப்பை அடுத்து, இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்று இருக்கிறார். இதே காரணத்தை கூறியதற்கு, இறந்தவர் சடலத்துடன் செல்பி எடுத்து அனுப்பக் கோரி போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
“இறந்தவர் சடலத்துடன் எப்படி செல்பி எடுத்துக் கொள்வது? இது மிகவும் வருத்தமளிக்கும் செயல். துளியும் இரக்கமற்ற உயர் அதிகாரிகளின் மனித நேயமிக்க உத்தரவு இது” என பாதிக்கப்பட்ட ஓட்டுனர் தெரிவித்தார்.