25.6 C
Jaffna
January 15, 2025
Pagetamil
மலையகம்

மற்றொருவர் நடைபயணம்!

அரசாங்கத்தை பதவிவிலக வலிறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக, தலவாக்கலை நகரில் இருந்து, சசிகுமார் என்பவர் நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த தனிமனித நடைபயணமானது, காலிமுகத்திடலில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக என்றும் இன்னும் மூன்று நாள்களில் தான் கொழும்பை சென்றடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (3) காலை தலவாக்கலை நகர மத்தியில் ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து அவரை, கொட்டகலையில் நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார். அவருடன் நகர மக்களும் உடனிருந்தனர். மாலை அணிவித்து, ஆசி வழங்கி அவரின் போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update – டிக்கோயா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பிரவாசி பாரதிய திவாஸ்: இந்தியத் தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

east tamil

கொட்டகலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து

east tamil

16 வயது மாணவி மாயம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

Leave a Comment