24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இந்தியா

நண்பர்களுடன் மது விருந்து; திருமணத்திற்கு தாமதமாக வந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி: வாழ்த்த வந்த உறவினருக்கு கழுத்தை நீட்டிய மணப்பெண்!

நேர தாமதம் வாழ்க்கையில் பல முக்கியமான விடயங்களை இழக்கச் செய்து விடும் என்பதற்கு மற்றொரு உதாரணமான சம்பவமொன்று நடந்துள்ளது.

மது விருந்தில் கலந்து கொண்டதால் சரியான நேரத்திற்கு மணமகனால் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. நீண்டநேரம் காத்திருந்து களைத்த மணமகள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவரை மணமகள் மணந்துள்ளார்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்ரா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22)  நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு விழா தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆனால் மணமகன் வரவில்லை.

திருமணமாகும் மகிழ்ச்சியை கொண்டாட மணமகன் தனது நண்பர்களுடன் மது விருந்து வைத்திருந்தார். அங்கு அவர்கள் குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தன்.

இறுதியில் இரவு 8 மணிக்கு திருமண நிகழ்விற்கு வந்தனர்.

மணமகனும் நண்பர்களும் குடிபோதையில் காணப்பட்டனர். திருமண மண்டபத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், விருந்தினர்களுடனும் தகராற்றில் ஈடுபட்டனர்.

மாலை 4 மணிக்கு திருமணம். மணமகன் வந்ததோ இரவு 8 மணி. போதாதற்கு குடிபோதையில் வந்து ரகளையும் செய்தார். இதனால் மணமகளின் தந்தை கடுப்பாகி விட்டார்.

குடிகாரனிற்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்.

உடனடியாக, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவருடன் பேசி, அவரை மணமகனாக்கினார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

மகா கும்பமேளாவுக்கு தயாரான பிரயாக்ராஜ்: 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

Pagetamil

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு

Pagetamil

7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

Pagetamil

Leave a Comment