கடுவெல பொலிஸ் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடியிருப்புக்கான வாடகைக் கொடுப்பனவுகளை செலுத்த தவறியதாக கடுவெல பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களாக வாடகை பணம் செலுத்தப்படவில்லை என பொலிஸ் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட ரூ.2 மில்லியன் பணம் செலுத்தப்படாமல் உள்ளது.
இதேவேளை, கடுவெல பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிடமாக ஒதுக்கப்பட்டுள்ள வீடொன்றின் உரிமையாளர், வாடகைக் கொடுப்பனவுகளை பொலிஸார் செலுத்தத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 09 மாதங்களாக பொலிஸ் நிலையம் நிலுவையிலுள்ள வாடகைக் கொடுப்பனவுகளை செலுத்தவில்லை என அந்த நபர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் நிலையத்தில் இரண்டு பகுதிகளாக ஒப்படைக்கப்பட்ட முழு கட்டிடத்துக்கான செலவை மதிப்பிடுமாறு திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திறைசேரியின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, நிலுவைத் தொகைகள் தீர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.