சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரால் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள சில கட்சிகள் மற்றும் குழுக்கள் இது தொடர்பில் சபாநாயகரிடம் இதுவரை பல யோசனைகளை முன்வைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் இருந்து தம்மை சுயாதீனமாக அறிவித்துக் கொண்ட குழுவும் அரசியலமைப்பு திருத்த வரைபுகளை சபாநாயகரிடம் கையளித்த குழுக்களில் அடங்கும்.
இதேவேளை, நிகழ்ச்சி நிரல் உட்பட அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பிலும் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.