27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
உலகம்

தாயாரிடமிருந்து பிரித்து இழுத்து செல்லப்பட்டு தமிழ் இளைஞனிற்கு தூக்குத் தண்டனை!

போதைப் பொருள் கடத்தல் குறறச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களிற்கும்மேலாக சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று (27) காலையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

நாகேந்திரன் தர்மலிங்கத்தின் தாயார் அவரது மரண தண்டனைக்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு நேற்று (26) தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

நாகேந்திரனுக்கு நாளை புதன்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றத திட்டமிடப்பட்டுள்ளது.

தாயார் பாஞ்சலை சுப்பிரமணியம் கடந்த திங்கட்கிழமை செய்த கடைசி நிமிட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஆன்ட்ரூ பாங், ஜூடித் பிரகா‌ஷ், பெலிண்டா ஆங் ஆகியோர் செவ்வாய் (26) அன்று தள்ளுபடி செய்தனர்.

நாகேந்திரனும் அவரின் தாயார் பஞ்சாலை சுப்ரமணியமும் நேற்று முன்தினம்  (25) குற்றவியல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

நாகேந்திரன் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் நீதிமன்றம் அந்த மனுவைப் பரிசீலித்தது.

நாகேந்திரனின் முந்திய மேல்முறையீடுகளை விசாரித்த தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது தலைமைச் சட்ட அதிகாரியாகவும் இருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டது.

அதன் காரணமாக, நாகேந்திரனைத் தூக்கிலிடுவது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்றுகூறி மரண தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க மனு சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. குழுவைப் பிரதிநிதித்து நீதிபதி ஆண்ட்ரூ பாங் நேற்று தீர்ப்பை வாசித்தார்.

நாகேந்திரன் தர்மலிங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட முறையீடு அடிப்படையற்றது என்று நீதிமன்றத் தீர்ப்பு கூறியது.

அது, நீதிமன்ற நடைமுறையினுடைய இறுதித் தீர்ப்பின் மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காகத் திட்டமிடப்பட்ட முயற்சியைப் போல் தோன்றுவதாக நீதிபதி பாங் குறிப்பிட்டார்.

உலகின் எந்தவொரு நீதிமன்றமும் மனுதாரர் கால வரம்பின்றி வழக்குகளைத் தள்ளிக்கொண்டே போக அனுமதிக்கமாட்டாது என்று அவர் சொன்னார்.

ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தின் கடைசித் தீர்ப்பு, கடைசித் தீர்ப்பாகவே இருக்கவேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து, நாகேந்திரனை மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற சட்டபூர்வ வழிகள் அனைத்தும் மூடப்பட்டது.

பாஞ்சலையின் மேல்முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், நாகேந்திரன் அவரது குடும்பத்தாரைச் சந்திக்க இரண்டு மணிநேர அவகாசம் அளிக்கப்பட்டது.

கண்ணாடி தடுப்பிற்கு அப்பாலிருந்த குடும்பத்தினருடன் அவர் இறுதி சந்திப்பை நிகழ்த்தினார். குடும்பத்தினர் வாங்கிச் சென்ற புத்தாடை அணிந்து இறுதிப்புகைப்படம் எடுக்கப்பட்டு குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

பின்னர், தாயாரை பிரிய மனமின்றியிருந்த நாகேந்திரனை பொலிசார் கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர் ‘அம்மா என கதறியழுதுள்ளார்.

42.7கிராம் ஹெரோயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் 2009ஆம் ஆண்டு நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.

அதைத்தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் நாகேந்திரனுக்கு இலேசான அறிவுசார் மாற்றுத்திறன்  இருப்பதுடன், அவரது IQ அளவானது 69 புள்ளிகள் மட்டுமே உள்ளதாகவும், அவர் நுண்ணறிவு குறைபாடு உள்ளவர் என்பதுடன் இதுவும் ஒரு வகையான ஊனம் என்று வாதிட்ட நாகேந்திரன் தரப்பினர், இத்தகைய குறைபாடு உள்ளவர்களை தூக்கிலிடக்கூடாது என்று வலியுறுத்தினர்.

எனினும் நாகேந்திரனது மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என சிங்கப்பூர் நீதிமன்றம் தெரிவித்ததுடன், நவம்பர் 2021 10ம் திகதி நாகேந்திரன் தூக்கிலிடப்படுவார் என அறிவித்தது.

இறுதிப் புகைப்படம்

ஆனால் மேல்முறையீட்டுக்குப் பின்னர் அவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த மாதம், தலைமை நீதிபதி சுந்தரே‌ஷ் மேனன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழு மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தனர்.

நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது தலைமை சட்ட அதிகாரியாக இருந்தவர் சுந்தரே‌ஷ் மேனன்,

நாகேந்திரனின் மேல்முறையீட்டை அவரே தலைமை வகித்து விசாரித்தது அரசியல் சாசனப்படி நியாயமான வழக்குவிசாரணைக்கான அவரது உரிமைகளை மீறும் செயல் என்று நேற்று நாகேந்திரன் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

ஆனால் அந்த வாதம் அடிப்படை அற்றது என்ற அரசாங்க சட்டத்தரணி, மேனன் அந்த மேல்முறையீட்டை விசாரித்தபோது நாகேந்திரனின் தரப்புக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

நேற்று நாகேந்திரனின் தாயார் பாஞ்சலை, நீதிமன்றத்தில் தமிழில் பேசினார்.

தமது மகன் தமக்கு உயிடன் திரும்ப வேண்டும் என்று அவர் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

எனினும், அவரது மனு நேற்று நிராகரிப்பட்டு, இன்று நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார்.

தற்போது அவரது உடல் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment