மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின்சார சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம் மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமை போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டண உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்பதை அரசு முடிவு செய்யும்.